சகோதரர்களை தாக்கிய 7 பேருக்கு வலை

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த கல்மண்டபத்தை சேர்ந்தவர் கஜேந்திரன்,41; கடந்த மாதம் 5ம் தேதி, ஊர் கோவில் சம்பந்தமாக சிறப்பு அதிகாரிகள் முன்னிலையில் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பங்கேற்ற கஜேந்திரனின் சகோதரர் ஆறுமுகம், ஊர் சம்பந்தமாக பொது கணக்கு கேட்டபோது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த புகழேந்தி, 55; சேதுபதி,20; ஏழுமலை, 82; புஷ்பராஜ், 42; செல்வம்,38; அய்யப்பன் (எ) பிரபாகரன்,45; ஜெயராமகிருஷ்ணன், 22; ஆகியோர் ஆறுமுகத்தை தாக்கினர். தடுக்க முயன்ற கஜேந்திரனையும் தாக்கினர். கஜேந்திரன் காயமடைந்து சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்து நெட்டப்பாக்கம் போலீசில் அவர் அளித்த புகாரில் புகழேந்தி உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement