போலீஸ்-வக்கீல்களுக்கு உயர்மட்ட கமிட்டி அறிவுரை

புதுச்சேரி: வக்கீல்-போலீசார் இடையிலான பிரச்னையை சுமூகமாக தீர்க்க வேண்டும் என, உயர்மட்ட கமிட்டி அறிவுறுத்தியது.

புதுச்சேரி கோர்ட்டில் வக்கீல்-போலீசார் இடையே இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்த தற்போது சென்னை ஐகோர்ட் நீதிபதி சுப்பிரமணியன் சேர்மனாக கொண்டு மாநில அளவிலான உயர்மட்ட கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் நீதிபதிகள், தலைமை செயலர், சட்டத் துறை செயலர், வக்கீல் சங்க தலைவர், சீனியர் வக்கீல்கள், மகளிர் வக்கீல் சங்க நிர்வாகிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உயர்மட்ட கமிட்டி ஆலோசனை கூட்டம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அலுவலகத்தில் நடந்தது. சென்னை ஐகோர்ட் நீதிபதி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

போக்சோ நீதிமன்ற நீதிபதி சுமதி, தலைமை செயலர் சரத்சவுகான், டி.ஜி.பி., ஷாலினி சிங், சட்டத் துறை செயலர் சத்தியமூர்த்தி, புதுச்சேரி வக்கீல் சங்க தலைவர் ரமேஷ், பொதுசெயலாளர் நாராயணகுமார், காரைக்கால் வக்கீல் சங்க தலைவர் திருமாறன், காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வழக்கறிஞர்கள், போலீசாருக்கும் இடையே உள்ள பிரச்னையை சுமூகமான முறையில் அணுக வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.

Advertisement