மாற்று கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

திண்டிவனம்: திண்டிவனத்தில் மாஜி அமைச்சர் முன்னிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 300 பேர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

மயிலம் மேற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அகூர், காட்டுச்சிவரி, நடுவனந்தல், அழகியநல்லுார், இளமங்கலம், விழுக்கம், மண்ணம்பூண்டி பகுதிகளைச் சேர்ந்த தி.மு.க., - பா.ம.க., - பா.ஜ.,வை சேர்ந்த 300 பேர் அ.தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

திண்டிவனத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தனர்.

மயிலம் தொகுதி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சம்பத், மேற்கு ஒன்றிய செயலாளர் விஜயன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement