ஆலோசனைக் கூட்டம் 

விழுப்புரம்: விழுப்புரத்தில் பட்டியல் இனத்தவர் குடியிருப்பு பகுதி இந்து கோவில் மேம்பாடு மற்றும் அர்ச்சகர் நல அறக்கட்டளை நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

மாவட்ட பட்டியல் இனத்தவர் குடியிருப்பு பகுதி இந்து கோவில் மேம்பாடு நிறுவனர் தீனதயாளன் தலைமை தாங்கினார். எஸ்.சி., - எஸ்.டி., பெடரேஷன் அமைப்பாளர் தனசேகரன், தலைவர் ராஜன், துணை தலைவர் வாசுதேவன், மாவட்ட தலைவர் நாகராஜன், சிவராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில், பட்டியல் இனத்தவருக்காக சிறப்பு உட்கூறு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வழங்கி, சட்ட விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement