நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கல்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3850602.jpg?width=1000&height=625)
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி ஒன்றியத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நேமூரில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மானியத்தில் நடமாடும் காய்கறி வண்டி, பூச்சியினை கட்டுப்படுத்த சோலார் பொறி, தோட்டக் கலை இடு பொருட்கள் ஆகியவற்றை வழங்கினார்.
முன்னதாக காணை அடுத்த கருங்காலிப்பட் டில் சொட்டு நீர்பாசனத்தில் சாகுபடி செய்யப்படும் தர்பூசணி நிலங்கள், விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருட்களை வழங்கினார்.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்பழகன், உதவி இயக்குனர்கள் ஜெய்சன், சுரேஷ், வெங்கடேசன், தோட்டக்கலை அலுவலர் அனுசுயா, உதவி தோட்டக்கலை அலுவலர் அஜித்குமார் உட்பட முன்னோடி விவசாயிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பொழுது போக்கு மன்றம்: நா.த.க.,வை கிண்டல் செய்த துரைமுருகன்
-
டில்லியை அடுத்து மேற்கு வங்கம் தான்: மம்தாவுக்கு பா.ஜ., எச்சரிக்கை
-
' இது புது ஐடியாவா இருக்கே...' வழுக்கை தலையில் விளம்பரம் மூலம் சம்பாதிக்கும் நபர்
-
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பீதி
-
அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா: டிரம்ப் சொன்னது என்ன?
-
இனப் பாகுபாடு பார்ப்பதா? தென் ஆப்ரிக்காவிற்கு நிதியுதவியை நிறுத்தினார் டிரம்ப்
Advertisement
Advertisement