என்.வி.ஆர்., இல்ல திருமண வரவேற்பு

திண்டிவனம்: திண்டிவனத்தில் நடந்த அ.தி.மு.க., பிரமுகர் என்.வி.ஆர்., இல்ல திருமண வரவேற்பு விழா நடந்தது.

விழுப்புரம் மாவட்ட ஜெ., பேரவை இணைச் செயலாளர் என்.வி.ஆர்.விஜயகுமார் சகோதரர் ராமகிருஷ்ணன் - அகிலா தம்பதியின் மகள் நிவேதா - விஜய்ஆனந்த் ஆகியோரின் திருமண வரவேற்பு விழா திண்டிவனத்தில் சுலோசனா பங்காரு திருமண நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

என்.வி.ஆர்.விஜயகுமார், மாவட்ட மகளிர் அணி பொருளாளர் விஜயலட்சுமி வரவேற்றனர்,

விழாவில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், நியூஸ் ஜெ., நிர்வாக இயக்குனர் ராதாகிருஷ்ணன் மணமக்களை வாழ்த்தினர்.

மேலும், பார்கவுன்சில் உறுப்பினர் கோதண்டம், தொழிலதிபர் மூர்த்தி, ராம்டெக்ஸ் வெங்கடேசன், அ.தி.மு.க., மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், நகர செயலாளர் தீனதயாளன், மாநில ஜெ.,பேரவை துணைச் செயலாளர் பாலசுந்தரம்.

மாவட்ட ஜெ., பேரவை இணைச் செயலாளர் குமார், மரக்காணம் ஒன்றிய செயலாளர் நடராஜன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் தமிழ்ச்செல்வி செல்லபெருமாள், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் சேகர்.

முன்னாள் எம்.எல். ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், நகர செயலாளர் கண்ணன், நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் உட்பட பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Advertisement