மதுபாட்டில் கடத்திய 2 வாலிபர்கள் கைது

வானுார்: புதுச்சேரியில் இருந்து பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிளியனுார் போலீசார் நேற்று கீழ்கூத்தப்பாக்கம் சந்திப்பு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் பைக் சீட் அடியில் புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. பைக்கில் வந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், செய்யூர் அடுத்த வெடால் கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் மகன் சதீஷ், 25; ஞானவேல் மகன் ஆகாஷ், 20; என்பதும், சதீஷ் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு நண்பர்களுக்கு விருந்தளிப்பதற்காக புதுச்சேரி சேதராபட்டில் இருந்து மது பாட்டில் கடத்திச் சென்றது தெரியவந்தது.

உடன் போலீசார் வழக்குப் பதிந்து 62 குவார்ட்டர் மது பாட்டில்கள் மற்றும் ேஹாண்டா டியோ பைக்கையும் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

Advertisement