விடுதியில் தங்கியவர் சடலமாக மீட்பு

பல்லடம் : பல்லடம் அடுத்த, வெங்கிட்டாபுரத்தை சேர்ந்தவர் கணேஷ் சக்திவேல், 50. ஆட்டோ கன்சல்டிங் தொழில் நடத்தி வந்தார். மனைவி மற்றும் மகனுடன் வசிக்கிறார். கணேஷ் சக்திவேலுக்கு, மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால், அடிக்கடி வீட்டில் சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் வீட்டை விட்டு வெளியேறி - திருச்சி ரோட்டில் உள்ள விடுதி ஒன்றில் அறை எடுத்து தங்கினார்.

நான்கு நாட்களாக அறை திறக்கப்படாத நிலையில், சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள், பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணை மேற்கொண்ட போலீசார், இறந்த நிலையில் கிடந்த கணேஷ் சக்திவேலின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த கணேஷ் சக்திவேலுக்கு, சமீபத்தில்தான் அறுவை சிகிச்சை நடந்துள்ளது. மது அருந்த வேண்டாம் என குடும்பத்தினர் கூறியும் கேட்காமல், விடுதியில் தங்கி மது அருந்தியதாக கூறப்படுகிறது. மகன் கார்த்திக் பாபு அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement