'வணக்கம் தமிழா குழு'வின் பொங்கல் விழா கோலாகலம்

ஒயிட்பீல்டில் உள்ள பிரஸ்டீஜ் சாந்தி நிகேதன் எனும் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு பல மாநிலங்களை சேர்ந்த 1,800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தமிழர்களாவர்.

குடியிருப்பு வளாகத்தில் 10வது ஆண்டாக பொங்கல் விழா, நேற்று,'வணக்கம் தமிழா' குழுவினர் சார்பில் நடந்தது.

'சிங்கார சென்னை' எனும் கருப்பொருளில் நடந்தது. இதற்காக சென்னையில் உள்ள நேப்பியர் பாலம், ஐ லவ் சென்னை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை மியூசியம் என சென்னையை பிரதிபலிக்கும் கூடிய இடங்கள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தன.

நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பாடல் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. உணவகங்கள், அணிகலன், குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி அமைக்கப்பட்டிருந்தன.

இன்று மதியம் வாழை இலையில் தமிழர் மரபு உணவுகள் பரிமாறப்படுகின்றன.

விழா ஏற்பாடுகளை, வணக்கம் தமிழா குழுவின் அருணகிரி, சுபாஷினி, கவிதா திலீப், சதீஷ், ரங்கசாமி, சாந்தி குரு, அபர்ணா சதீஷ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Advertisement