சிறுமி பாலியல் பலாத்காரம் 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை
ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே சிறுமி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில், 2 பேருக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்-டது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு கடந்த, 2021 டிச.,ல் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்து சென்று பெற்றோர் பரிசோதனை செய்ததில், ஆறு மாத கர்ப்பமாக இருந்தார். சிறுமியின் தாயார் புகாரின்படி, அரக்கோணம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்-தனர்.
இதில் அப்பகுதியை சேர்ந்த சிலர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, குடும்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்-தது. இது தொடர்பாக இரு சிறுவர் உட்பட, 10 பேரை மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர். சிறுவர்கள் மீதான வழக்கு விசாரணை, வேலுார் சிறார் நீதிமன்றத்தில் நடக்கிறது. மற்ற எட்டு பேர் மீதான விசாரணை, ராணிப்பேட்டை நீதிமன்-றத்தில் நடந்தது. இதில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வம் தீர்ப்பளித்தார். முக்கிய குற்றவாளிகளான ஜான-கிராமன், 26, மூர்த்தி, 25, ஆகியோருக்கு தலா, 20 ஆண்டு சிறை மற்றும் தலா, 10,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். வழக்கில் தொடர்புடைய மற்ற ஆறு பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
மேலும்
-
பொழுது போக்கு மன்றம்: நா.த.க.,வை கிண்டல் செய்த துரைமுருகன்
-
டில்லியை அடுத்து மேற்கு வங்கம் தான்: மம்தாவுக்கு பா.ஜ., எச்சரிக்கை
-
' இது புது ஐடியாவா இருக்கே...' வழுக்கை தலையில் விளம்பரம் மூலம் சம்பாதிக்கும் நபர்
-
கரீபியன் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பீதி
-
அமெரிக்காவில் இருந்து இளவரசர் ஹாரி நாடு கடத்தப்படுவாரா: டிரம்ப் சொன்னது என்ன?
-
இனப் பாகுபாடு பார்ப்பதா? தென் ஆப்ரிக்காவிற்கு நிதியுதவியை நிறுத்தினார் டிரம்ப்