லேத் பட்டறையில் தீ ரூ.4 லட்சத்துக்கு சேதம்

கெங்கவல்லி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே மண்மலை, பாலக்-காட்டை சேர்ந்தவர் செந்தில்குமார், 42; செந்தாரப்பட்டி வேளாண் கூட்டுறவு சங்கம் அருகே லேத் பட்டறை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு பட்டறையை பூட்டிச்சென்றார். நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், மேலும் தீ பரவாமல் அணைத்தனர். ஆனாலும், 32,000 ரூபாய், இரு ஆழ்துளை குழாய் கிணறு மோட்டார், டிரில்லிங் மிஷின் உள்பட நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் எரிந்து சேதமானது. மின் கசிவால் விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது-குறித்து தம்மம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement