பாகூர் மருத்துவமனையில் கண் பராமரிப்பு மையம் திறப்பு

பாகூர்: பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண் பராமரிப்பு மையத்தை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,அலோகா விஷன் திட்டம் மற்றும் பாண்டிச்சேரி ரவுண்ட் டேபிள் 104- அமைப்புடன் இணைந்து, கண் பராமரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு, கண் பராமரிப்பு மையத்தை துவக்கி வைத்தார்.

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ஆனந்தவேல், ரவுண்ட் டேபிள் 104ன் தலைவர் விக்னேஷ்வரன், அலோகா விஷன் பிரேம்ஜித், அர்ச்சனா மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இங்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரை, தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 வரை, கண் பரிசோதனை நடைபெறும். பொதுமக்கள், தங்களது ஆதார் அட்டையுடன் சென்று கண் பரிசோதனை செய்து, பார்வை திறனுக்கு ஏற்ற வகையில், கண்ணாடியை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement