நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய எஸ்.பி.வேலுமணி!

1

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்துள்ளார்.



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரும், தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ., எஸ்.பி. வேலுமணி. இவரது மகன் விஜய் விகாஸ் திருமணம் மார்ச் 3ம் தேதி, கோவை ஈச்சனாரியில் நடக்க உள்ளது.

மகன் திருமணத்துக்காக பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்களை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கி வருகிறார். அந்த வகையில் சென்னையில் நடிகர் ரஜினியை எஸ்.பி., வேலுமணி சந்தித்து அழைப்பிதழ் வழங்கினார். அப்போது அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

Advertisement