வருமான வரி அலுவலகத்தில் சங்க கொடியேற்று விழா

புதுச்சேரி: முத்தியால்பேட்டை வருமான வரித்துறை அலுவலகத்தில், 73வது ஆண்டு சம்மேளன தினத்தையொட்டி சங்க கொடியேற்று விழா நடந்தது.

புதுச்சேரி வருமான வரித்துறை ஊழியர் சங்க தலைவர் அரவிந்தநாதன் தலைமை தாங்கினார்.

செயலாளர் சிரஞ்சிவி பேஹ்ரா முன்னிலை வகித்தார். அதிகாரிகள் சங்க செயலாளர் தமிழ்செல்வன், சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

சங்கத்தின் புதுச்சேரி மண்டல செயலாளர் கோவிந்தன், அதிகாரிகளின் சங்க தலைமைக்குழு உறுப்பினர் செங்குட்டுவன், தலைவர் கிேஷார், முன்னாள் அதிகாரிகள் சங்க தலைவர் கணேசன், உறுப்பினர் சுரேஷ்பாபு உள்ளிட்ட அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். அகிலன் நன்றி கூறினார்.

Advertisement