சிலிண்டர் வெடித்து பீஹார் நபர் படுகாயம்

அத்திப்பள்ளி: காஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில், பீஹார் நபர் பலத்த காயம் அடைந்தார்.

பீஹாரை சேர்ந்தவர் தினேஸ் தாஸ், 38. இவர் பிழைப்பு தேடி, பெங்களூரு வந்தார். ஆனேக்கல்லின் நெரலுாரில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில், இவரது வீட்டு சமையல் அறையில் இருந்த காஸ் சிலிண்டரில் காஸ் கசிந்தது. இதை அவர் கவனிக்கவில்லை.

நேற்று காலையில் எழுந்த அவர், காஸ் கசிந்திருப்பதை உணராமல், லைட்டை போட்டார். அப்போது காஸ் வெடித்து சிதறியது. வீட்டின் தகடு மேற்கூரை சேதமடைந்தது. தீப்பிடித்ததில் தினேஷ் தாஸ் காயம் அடைந்தார்.

தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர். படுகாயம் அடைந்த தினேஷ் தாஸ், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அத்திப்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement