வடலுார் சத்திய ஞானசபையில் தைப்பூச விழா கொடியேற்றம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852013.jpg?width=1000&height=625)
கடலுார் : வடலுார் சத்திய ஞானசபையில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார் மாவட்டம், வடலுாரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் இன்று (11ம் தேதி) 154வது தைப்பூச விழா நடக்கிறது. இவ்விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
அதை தொடர்ந்து, வள்ளலார் பிறந்த மருதுார், தண்ணீரால் விளக்கு எரிய வைத்த கருங்குழி இல்லம், வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் மற்றும் சத்திய ஞான சபையில் சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.
இன்று (11ம் தேதி) சத்திய ஞானசபையில் ஆறு காலமாக 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கிறது. காலை 6:00 மணிக்கு முதல் கால ஜோதி தரிசனம் நடக்கிறது.
தொடர்ந்து, காலை 10:00 மணி, மதியம் 1:00 மணி, இரவு 7:00 மணி மற்றும் 10:00 மணி, 12ம் தேதி அதிகாலை 5:30 மணிக்கு ஜோதி தரிசனம் நடக்கிறது.
பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
வரும் 13ம் தேதி, மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்தி வளாக மாளிகையில் திருஅறை தரிசன பெருவிழா நடக்கிறது.
மேலும்
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து
-
பஞ்சாப் அரசுக்கு சிக்கலா: முதல்வர், எம்.எல்.ஏ.,க்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை
-
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய எஸ்.பி.வேலுமணி!
-
கட்டண உயர்வுக்கு கண்டனம்; பெங்களூருவில் மெட்ரோ ரயில்களை புறக்கணிக்கும் பயணிகள்
-
ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தை வாங்க விரும்பிய எலான் மஸ்க்: பதிலடி கொடுத்த சாம் ஆல்ட்மென்
-
10வது படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு! ரயில்வேயில் 32,438 காலி பணியிடங்கள்