சிவன் உருவாக்கிய வீரபத்ரரை கொடச்சியில் தனி கோவிலில் தரிசிக்கலாம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852014.jpg?width=1000&height=625)
பெலகாவி மாவட்டம், ராம்துர்க் கொடச்சி கிராமத்தில் உள்ளது வீரபத்ரர் கோவில். இம்மாவட்டத்தில், கொடச்சி திருவிழா என்பது பிரசித்தி பெற்றது. ஆண்டுக்கு ஒரு முறை நவம்பர், டிசம்பரில் நடக்கும் திருவிழாவுக்கு, மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
புராண கூற்றுபடி, ஒரு முறை தக் ஷன் மன்னர் நடத்திய யாகத்துக்கு தன் மகள் தாட்சாயிணி, மருமகன் சிவனை அழைக்கவில்லை. சிவனின் பேச்சை மீறி, அங்கு சென்ற தாட்சாயிணியை தக் ஷன் அவமதித்தார். இதை பொறுத்து கொள்ள முடியாத தாட்சாயிணி, அங்கிருந்த புனித யாகத்தில் குதித்து, தன்னைத்தானே அர்ப்பணித்து கொண்டார்.
உருவான வரலாறு
இதனால் கோபமடைந்த சிவபெருமான், வீரபத்ரரை உருவாக்கினார். தக் ஷன் நடத்திய யாகத்தையும், தக் ஷனையும் அழிக்க சிவபெருமான் உத்தரவிட்டார். இதையடுத்து, தக் ஷனை காலால் மிதித்தும், வாளால் குத்தியும் வீரபத்ரர் அழித்தார்.
சிவனின் உக்ர கோலத்தை பார்த்த தேவர்கள், அவரை சாந்தப்படுத்தினர். உலகை காப்பாற்றவும், தக் ஷன், தாட்சாயிணியை மன்னித்து அவர்களின் உயிரை திருப்பி அளிக்குமாறும் கேட்டு கொண்டனர்.
இதனால் சமாதானம் அடைந்த சிவபெருமான், தனது சக்தியால், தாட்சாயிணியை மீண்டும் உயிர்ப்பித்தார். இதன் பின், அவர் 'பார்வதி தேவி' என்று அழைக்கப்பட்டார். மன்னன் தக் ஷனும் தனது உயிரை திரும்ப பெற்றார்; தனது தவறை அவர் உணர்ந்தார். அன்று முதல் சிவனின் அவதாரங்களில் ஒருவராக, வீரபத்ரர் வணங்கப்படுகிறார். இவரை, பிரதான சிவன் கோவில்களில் வழிபடலாம்.
ஆனால், கொடச்சியில் தான், வீரபத்ரேஸ்வரருக்காக தனி கோவில் கட்டப்பட்டு உள்ளது. இக்கோவில் நுழைவு வாயில் சாளுக்கிய பாணியிலும்; மூலஸ்தானம் விஜயநகர கட்டட பாணியிலும் உள்ளது. வளாகத்தில் பிற தெய்வங்களின் சன்னிதிகளும் உள்ளன. கோவில் துாண்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளன. யாகங்கள், திருமணம் நடத்துவதற்காக தனி மண்டபம் கட்டப்பட்டு உள்ளது.
நீண்ட வாள்
கோவிலில் வீரபத்ரேஸ்வரர் சுவாமியின் பிரம்மாண்டமான சிலையை காணலாம். நீண்ட வாளுடனும், தக் ஷனை தன் வலது காலால் மிதித்தவாறும் வீரபத்ரர் காணப்படுகிறார்.
வீரபத்ரரின் பத்து கைகளில் நீண்ட வாள், திரிசூலம், உடுக்கை, மணி, வில், அம்பு, அக்னி போன்றவை காணப்படுகிறது. காலையில், வீரபத்ரருக்கு வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். மாலையில், பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும்
. - நமது நிருபர் -
மேலும்
-
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா: தைப்பூசத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து
-
பஞ்சாப் அரசுக்கு சிக்கலா: முதல்வர், எம்.எல்.ஏ.,க்களுடன் கெஜ்ரிவால் ஆலோசனை
-
நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசிய எஸ்.பி.வேலுமணி!
-
கட்டண உயர்வுக்கு கண்டனம்; பெங்களூருவில் மெட்ரோ ரயில்களை புறக்கணிக்கும் பயணிகள்
-
ஓபன் ஏ.ஐ., நிறுவனத்தை வாங்க விரும்பிய எலான் மஸ்க்: பதிலடி கொடுத்த சாம் ஆல்ட்மென்
-
10வது படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு! ரயில்வேயில் 32,438 காலி பணியிடங்கள்