தைப்பூசம் சிறப்பு ரயில்

மதுரை : இன்று தைப்பூசத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக மதுரை - பழநி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பிப். 11, 12ல் காலை 8:45மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06722) காலை 11:30க்கு பழநி செல்கிறது. மறுமார்க்கத்தில் மதியம் 3:00க்கு புறப்படும் ரயில் (06721) மாலை 5:45க்கு மதுரை வருகிறது.

கூடல்நகர், சோழவந்தான், கொடைரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஸ்டேஷன்களில் நிற்கும்.

Advertisement