லாரி மோதி மாணவி பலி

செஞ்சி; செஞ்சி அருகே லாரி மோதிய விபத்தில் சைக்கிளில் சென்ற பள்ளி மாணவி இறந்தார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம் மகள் கனிமொழி, 14; அனந்தபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று மாலை 600 மணி அளவில் பள்ளி முடிந்த பிறகு, சைக்கிளில் புதுப்பேட்டை கிராமத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

புதுப்பேட்டை அரசு துவக்கப்பள்ளி எதிரே வந்தபோது, ரேஷன் பொருள்களை இறக்கிவிட்டு செஞ்சிக்கு திரும்பி சென்ற லாரி, கனிமொழி மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த கனிமொழி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விபத்து குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement