தைப்பூச விழா கோலாகலம்

முருகனுக்கு விசேஷ நாளான தைப்பூசம், சென்னை, புறநகர் கோவில்களில் நேற்று, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

வடபழனி முருகன் கோவில், குன்றத்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில், பாரிமுனை கந்தகோட்டம் முத்துகுமாரசுவாமி உள்ளிட் கோவிலில் அதிகாலையில் பூஜை துவங்கியது.

ஏராளமான பக்தர்கள் பால் குடம், காவடி, அலகு குத்தி வந்து, தங்கள் நேர்த்திக்கடனை செய்தனர். நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசித்து சென்றனர். கடந்த ஆண்டைவிட, இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
- நமது நிருபர் -

Advertisement