வங்கதேச வீராங்கனைக்கு தடை
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852262.jpg?width=1000&height=625)
துபாய்: வங்கதேச கிரிக்கெட் வீராங்கனை ஷோலே அக்தர் 36. இதுவரை 2 ஒருநாள், 13 சர்வதேச 'டி-20'ல் பங்கேற்றுள்ளார். கடைசியாக 2022, அக்டோபர் 10ல் இலங்கைக்கு எதிரான 'டி-20' போட்டியில் விளையாடினார். கடந்த 2023ல் தென் ஆப்ரிக்காவில் பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை தொடர் நடந்தது.
இதற்கான வங்கதேச அணியில் ஷோலே இடம் பெறவில்லை. இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வங்கதேச வீராங்கனை ஒருவரிடம், 'பிக்சிங்' செய்வது குறித்து 'பேஸ்புக்' வழியாக பேசியுள்ளார். 'ஹிட் அவுட்' ஆனால், ரூ. 14 லட்சம் தருவதாக ஆசை காட்டினார்.
இதை அந்த வீராங்கனை, உடனடியாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,), ஊழல் தடுப்பு குழுவிடம் தெரிவித்தார். இதுகுறித்து ஐ.சி.சி., விசாரித்தது. முடிவில்,' போட்டியில் பிக்சிங் செய்ய முயன்றது, இதுகுறித்த விபரங்களை தெரிவிக்க மறுத்தது,' போன்ற காரணங்களுக்காக, கிரிக்கெட் தொடர்பான செயல்களில் ஈடுபட ஷோலேவுக்கு 5 ஆண்டு தடை விதித்தது. 'பிக்சிங்' தொடர்பாக தடை விதிக்கப்பட்ட முதல் சர்வதேச வீராங்கனை ஆனார் ஷோலே.
மேலும்
-
மீனவர்கள் இன்று முதல் 'ஸ்டிரைக்'
-
செங்கோட்டையன் வீட்டுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
-
கனிமொழி துவக்கிய திட்டத்திற்கு வனத்துறையினர் தடை விதிப்பு
-
ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்ட கர்ப்பிணி வயிற்றில் இறந்த சிசு அகற்றம்
-
கார்த்தி வெளிநாடு செல்வது எங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் டில்லி கோர்ட்டில் சி.பி.ஐ., முறையீடு
-
மாணவி மரணம்: ரூ.5 லட்சம் நிதியுதவி