அண்ணாமலை முதல்வராக பா.ஜ., சார்பில் பாதயாத்திரை
அண்ணாமலை முதல்வராக பா.ஜ., சார்பில் பாதயாத்திரை
ப.வேலுார்: பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வராக வேண்டி கபிலர்மலை பாலசுப்பிரமணியருக்கு, நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் அக்கட்சியினர் பாதயாத்திரை சென்றனர்.
முன்னதாக, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு ப.வேலுார் காவிரி ஆற்றில் இருந்து புனித நீராடி பால் காவடி, இளநீர் காவடி, தீர்த்த காவடியை எடுத்துக்கொண்டு, ப.வேலுார் முக்கிய வீதி வழியாக பாதயாத்திரையாக சென்று, கபிலர்மலை பாலசுப்பிரமணியர் கோவிலை அடைந்தனர்.நள்ளிரவில், கபிலர்மலை பாலசுப்பிரமணியருக்கு பால், இளநீர் அபிஷேகம், காவிரியாற்றின் புனித தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து, பாலசுப்பிரமணியருக்கு மாலையிட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பாத யாத்திரையை, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
பரமத்தி ஒன்றிய தலைவர் அருண், கபிலர்மலை ஒன்றிய தலைவர் வரதராஜ், மாவட்ட துணைத்தலைவர்கள் வடிவேல், கார்த்திக், நவலடி உள்பட, 200க்கும் மேற்பட்டோர் கலந்து
கொண்டனர்.