காளான் வளர்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 

புதுச்சேரி : ஆர்யா திட்டத்தின் கீழ் நடத்தப்படும் சிப்பிக் காளான் மற்றும் பால் காளான் வளர்ப்பு பயிற்சியில் பங்கேற்க இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் செய்திக்குறிப்பு:

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் வழிகாட்டுலின்படி 18 முதல் 35 வயது வரை உள்ள கிராமப்புற இளைஞர்கள் மற்றும் மகளிர்களை விவசாயத்தில் தக்க வைக்கும் ஆர்யா திட்டத்தின் கீழ் திறன் வளர்க்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

பயிற்சிக்கு, பின் அதனை சார்ந்த சுய தொழில் துவங்கவும், தேவையான உபகரணங்கள் மற்றும் உள்ளீட்டு பொருட்கள் வழங்கி வருகிறது. அதன்படி, இந்தாண்டு ஆர்யா திட்டத்தின் கீழ் வேளாண் அறிவியல் நிலையத்தில் இயங்கும் மனைவியல் பிரிவில் 'சிப்பிக் காளான் மற்றும் பால் காளான் வளர்ப்பு' பயிற்சி வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

பயிற்சியில் பங்குப்பெற, புதுச்சேரியை சேர்ந்த 18 முதல் 35 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும். பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள இளைஞர்கள் ஆதார் அட்டை நகலுடன், பயிற்சிக்கான விண்ணப்பத்தை வேளாண் அறிவியல் நிலைய அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வரும் 19ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான தகவலுக்கு பயிற்சி அதிகாரி பொம்மி- 7598252315 மற்றும் 0413-2271292, 2279758 எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement