நில உடமை பதிவேடு சரிபார்ப்பு முகாம்

சங்கராபுரம், : சங்கராபுரம் பகுதி விவசாயிகள், நில உடமை பதிவேடுகள் சரிபார்த்தல் முகாமில் பங்கேகற்க வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

சங்கராபுரம் தாலுகாவில் வரும் 15ம் தேதி வரை விவசாயிகள் நில உடமை பதிவேடுகள் சரிபார்த்தல் முகாம் அந்தந்த ஊராட்சிகளில் நடக்கிறது. விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து, பயன் பெறலாம். இதையொட்டி, பிரத்யேக அடையாள எண் வழங்கப்படும். வரும் காலங்களில் மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை இதன் அடிப்படையில் தான் வழங்கப்படும். இதில் விவசாயிகள் ஆதார் அட்டை, நிலப்பட்டா, ஆதார் எண் இணைக்கப்பட்ட மொபைல் ஆகியவற்றுடன் சென்று பயன் பெறலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement