வேதநாயகி, பாண்டீஸ்வரர் கோவிலில் வரும் 16ல் கும்பாபிஷேக விழா



வேதநாயகி, பாண்டீஸ்வரர் கோவிலில் வரும் 16ல் கும்பாபிஷேக விழா


மோகனுார்:மோகனுார், ஆரியூர் கிராமத்தில் விநாயகர், வேதநாயகி சமேத பாண்டீஸ்வரர், பாமா ருக்மணி சமேத நந்தகோபால கிருஷ்ணர், மகா மாரியம்மன், பிடாரி செல்லாண்டியம்மன், மலைக்கருப்பண்ண சுவாமி கோவில் உள்ளது. மேலும், குளத்துாரில் எல்லை கருப்பண்ண சுவாமி மற்றும் பரிவார தெய்வங்கள் எழுந்தருளி உள்ளனர். இக்கோவில் திருப்பணி மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி அனைத்தும் முடிவுற்றதை அடுத்து வரும், 16ல் கும்பாபிஷேக விழா நடத்த விழாக்குழுவினர் முடிவு
செய்துள்ளனர்.அதன்படி, நாளை இரவு, 8:00 மணிக்கு கிராம சாந்தியுடன் நிகழ்ச்சி தொடங்குகிறது. 14 காலை, 6:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, விநாயகர் ஹோமம், 8:00 மணிக்கு, மோகனுார் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு, வாஸ்து சாந்தி, கும்பலங்காரம், முதல் காலயாக பூஜை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 15 காலை, 8:30 மணிக்கு, விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாக பூஜை, மதியம், 12:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், மாலை, 5:00 மணிக்கு, கோபுர கலசம் வைத்தல், தீபாராதனை நடக்கிறது. 16 அதிகாலை, 4:30 மணிக்கு, புண்யாகவாசனம், நாடி சந்தானம், நான்காம் கால யாக பூஜையும், காலை, 7:50 மணிக்கு, கடங்கள் புறப்பாடும், 8:20 மணிக்கு, கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகம், தொடர்ந்து மூலஸ்தானம், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.

Advertisement