சென்னை மாணவர்களுடன் ராகுல் கட்டிப்பிடித்து ஆரவாரம்
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852744.jpg?width=1000&height=625)
டில்லி காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்ற, சென்னை கல்லுாரி மாணவ - மாணவியரின் கேள்விகளுக்கு பதிலளித்த, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், தன் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.
காங்கிரஸ் தொடர் தோல்வியை சந்தித்து வருவதால், இளைஞர்களிடம் பழகி, அவர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து, கட்சியை வழிநடத்த ராகுல் விரும்புகிறார். இதற்காக, நாடு முழுதுமுள்ள கல்லுாரி மாணவர்களை அழைத்து, அவர்களுடன் கலந்துரையாடும் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
ராகுல் உற்சாகம்
அதன்படி, சென்னை மாநிலக் கல்லுாரி உள்ளிட்ட சில கல்லுாரி மாணவ --- மாணவியர், 125 பேர் டில்லி சென்றனர். பார்லிமென்ட் கூட்ட அரங்கில் நடந்த விவாதங்களைப் பார்த்தபின், தமிழக காங்கிரஸ் மாணவர் அணி தலைவர் சின்னதம்பி தலைமையில், ஜன்பத் சாலையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் ராகுல் கேட்ட கேள்விகளுக்கு, மாணவர்கள் சரியாக பதில் அளித்தனர். மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராகுலும் பதிலளித்தார். அதில் உற்சாகம் அடைந்த ராகுல், மாணவர்களை கட்டிப்பிடித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ராகுலுடன், 'செல்பி' எடுத்து, மாணவர் --- மாணவியரும் ஆரவாரம் செய்தனர்.
இதுகுறித்து, மாணவ - மாணவியர் கூறியதாவது: டில்லியில் மூன்று நாட்கள் தங்கியிருந்தோம். தமிழக காங்கிரஸ் தலைவர் செயல்பாடு குறித்து, எங்களிடம் ராகுல் கேட்டறிந்தார். தேசிய அளவில், எந்த தலைவரை உங்களுக்கு பிடிக்கும் என்றும் கேட்டார். நாங்கள் ராகுலை தான் பிடிக்கும் என்றோம்; காரணம் கேட்டார். இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி, நாடு முழுதும் நடைபயணம் மேற்கொண்டதையும், எளிமையாக இருப்பதையும், கட்டுக்கோப்பாக உடலை பேணி வருவதையும் சொன்னோம். மேலும், பார்லிமென்டில் துணிச்சலாக தன் கருத்தை பதிவு செய்வதையும் காரணமாக தெரிவித்தோம்.
மகிழ்ச்சி
எங்கள், 'டிசர்ட்'டில் கையெழுத்திடும்படி கேட்டதும், அவர் கையெழுத்திட்டார். மகிழ்ச்சி, உற்சாகம் மிகுதி காரணமாக, சில மாணவர்கள், ராகுலுக்கு முத்தம் கொடுத்தனர். பதிலுக்கு மாணவர்களை கட்டிப்பிடித்து ராகுலும் முத்தம் கொடுத்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இறுதியில் மாணவ-மாணவியருக்கு ஜனநாயகத்தையும், மதசார்பின்மையையும் கடைப்பிடிக்க வேண்டும் என, ராகுல் அறிவுரை கூறினார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
![GoK GoK](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![V வைகுண்டேஸ்வரன்,Chennai V வைகுண்டேஸ்வரன்,Chennai](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![Subramanian Subramanian](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![கிஜன் கிஜன்](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![JAYACHANDRAN RAMAKRISHNAN JAYACHANDRAN RAMAKRISHNAN](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
மேலும்
-
கே.டி.எம்., அட்வெஞ்சர் 250 சி.சி., 390 சி.சி.,யில் 3 பைக்குகள்
-
எம்.ஜி., ஆஸ்டரில் டர்போ இன்ஜின் கிடையாது
-
ஹோண்டா கார்களுக்கு 'இ 20' சான்றிதழ்
-
மாருதி ஜிம்னி இந்தியாவில் பிளாப்; ஜப்பானில் 'ஹிட்'
-
ராணுவத்திற்கு எதிரான கருத்து: ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்
-
இந்தியாவில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம்: பிரான்சில் முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு