மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ப.வேலுார்,:கந்தம்பாளையம் அருகே, உப்புபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 52; இவருக்கு சொந்தமான ரிக் வண்டியில், ஈரோடு மாவட்டம், அந்தியூரை சேர்ந்த நாகேஸ், 50, வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று காலை, ரிக் வண்டியில் இருந்த இரும்பு கம்பிகளை, எடுத்து வைத்துக்கொண்டிருந்தார். அப்போது, இரும்பு பைப்புகளை எடுத்தபோது, அருகில் இருந்த உயரழுத்த மின் கம்பியில் இரும்பு பைப் உரசியது. இதில், மின்சாரம் தாக்கியதில் நாகேஸ் துாக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது நாகேஸ் உயிரிழந்தார். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement