கார் விபத்தில் இருவர் பலி

சிவகங்கை:சிவங்கை வேலாயுதசாமி கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் 65. இவர் நேற்று முன்தினம் அதே பகுதி சந்துரு என்பவருடன் காரில் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனுார் அருகே உள்ள பிடாரிசேரியில் இருந்து உறவினர்களை சிவகங்கையில் நடைபெற்ற தைப்பூச விழாவிற்காக அழைத்து வந்தார். காரை சந்துரு ஓட்டினார்.

இரவு 11:30 மணிக்கு சிவகங்கை அருகே மானாமதுரை திருப்புத்துார் சுற்றுச்சாலையில் மதுரை ரோடு ஜங்ஷன் பகுதியில் கார் வந்தபோது 40 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட ஆண் நடந்து சென்றது தெரியாமல் அவர் மீது மோதி பின்னர் ரோட்டோரத்தில் கவிழ்ந்தது.

இதில் மனநிலை பாதிக்கப்பட்டவரும், காரில் முன் இருக்கையில் அமர்ந்திருந்த நாகராஜனும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.

Advertisement