சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்

வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் தைப்பூச நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இக்கோயிலில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் முதல் 4 நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கபட்ட நிலையில், நேற்று காலை 6:00 மணிக்கு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு கோயில் பூசாரிகள் சிறப்பு பூஜைகளை செய்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வத்திராயிருப்பு, சாப்டூர் போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement