ழநிக்கு காவடி எடுத்து வந்த பா.ஜ., தலைவர் அண்ணாமலை

பழநி:பழநி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா நடைபெறும் நிலையில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை காவடி எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தார்.

பழநி திருஆவினன்குடியில் சுவாமி தரிசனம் செய்த பின் முருகன் கோயிலுக்கு படிபாதை வழியாக காவடியுடன் சென்றார். பக்தர்கள் வெளியேறும் பாதையில் சென்ற போது அவரை போலீசார் தடுத்தனர். இதன் பின் பேச்சுவார்த்தைக்கு பின் அனுமதித்தனர். படிப்பாதையில் சென்ற அவரை முருக பக்தர்கள் வரவேற்று கைகுலுக்கினர். முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவருடன் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ., தலைவர் ஜெயராமன், முன்னாள் மாவட்ட தலைவர் கனகராஜ் கட்சியினர் உடன் சென்றனர்.

Advertisement