நாகர்கோவில் நாகராஜா கோயில் தை திருவிழா தேரோட்டம்

நாகர்கோவில்:நாகர்கோவில் நாகராஜா கோயில் தை திருவிழா தேரோட்டம் நடந்தது.
நாகரை மூலவராகக் கொண்ட நாகர்கோவில் நாகராஜா கோயிலில் கருவறை இன்னும் ஓலை கூரையின் கீழ் அமைந்துஉள்ளது. இங்குள்ள புற்றில் இருந்து எடுக்கப்படும் மண் பக்தர்களுக்கு பிரசாதத்துடன் வழங்கப்படுகிறது.
இக்கோயிலில் தை திருவிழா கடந்த மூன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று ஒன்பதாம் நாள் விழாவில் காலையில் தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். இரவு 9:30 மணிக்கு சப்தாவரணம் நடந்தது. இன்று ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement