இளம்பெண் எரித்து கொலை
தென்காசி:தென்காசிமாவட்டம் கொல்லம் --- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலத்துார் குளத்து பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
எஸ்.பி., அரவிந்த் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். விரலில் மெட்டி இருந்தது. உடல் முழுவதும் கரிக்கட்டையான நிலையில் ஒரு கை மட்டும் எரியாமல் இருந்தது.
அருகில் மது பாட்டில் கிடந்தது. கொலைக்கான காரணம் குறித்து இலத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement