வி.சி.க., நிர்வாகி தாக்கியதாக புகார்: பெண் எஸ்.ஐ., 'சஸ்பெண்ட்'
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3852624.jpg?width=1000&height=625)
காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே சோமநாதபுரம் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் ப்ரணிதா. பிப்.5 ல் இங்கு வந்த வி.சி.க., வடக்கு மாவட்ட செயலாளர் இளைய கவுதமன் ,ஒரு பிரச்னையில் தன்னை தாக்கியதாக எஸ்.ஐ., புகார் அளித்தார். சிகிச்சைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதற்கு இளைய கவுதமன் மறுப்பு தெரிவித்திருந்தார். விசாரணையில் எஸ்.ஐ., கூறிய குற்றச்சாட்டு பொய்யானது, மிகைப்படுத்தப்பட்டது. விரிவான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் இப்பிரச்னையில் நேற்று எஸ்.ஐ., ப்ரணிதாவை 'சஸ்பெண்ட்' செய்து ராமநாதபுரம் டி.ஐ.ஜி., அபிநவ்குமார் உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement