பைக் விபத்தில் மேலும் ஒருவர் பலி
கடலுார் : குறிஞ்சிப்பாடி அருகே பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் மேலும் ஒரு மாணவி இறந்தார்.
குறிஞ்சிப்பாடி அடுத்த கேசவநாராயணபுரத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், 31; நேற்று முன்தினம் காலை அதே ஊரை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சுனில்ராஜ்,17, சாந்தினி, சந்தியா, பவித்ரா ஆகியோரை ஒரே பைக்கில் ஏற்றிக் கொண்டு குறிஞ்சிப்பாடி நோக்கி சென்றார்.
கஞ்சமநாதனபேட்டை அருகில் சென்றபோது, எதிரில் வந்த அரசு பஸ், பைக் மீது மோதியது. இதில், சுனில்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்ற நான்கு பேரும் சிதம்பரம் மற்றும் கடலுார் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இதில், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மரில் மாணவி பவித்ரா,15; சேர்க்கப்பட்டார். அங்கு சிகிக்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் இறந்தார்.
குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'பெர்பெட்டோ' இ.வி., ஸ்கூட்டர் 80 கி.மீ., ரேஞ்ச், 70 கி.மீ., டாப் ஸ்பீட்
-
கே.டி.எம்., அட்வெஞ்சர் 250 சி.சி., 390 சி.சி.,யில் 3 பைக்குகள்
-
எம்.ஜி., ஆஸ்டரில் டர்போ இன்ஜின் கிடையாது
-
ஹோண்டா கார்களுக்கு 'இ 20' சான்றிதழ்
-
மாருதி ஜிம்னி இந்தியாவில் பிளாப்; ஜப்பானில் 'ஹிட்'
-
ராணுவத்திற்கு எதிரான கருத்து: ராகுலுக்கு நீதிமன்றம் சம்மன்
Advertisement
Advertisement