சோதனை சாவடியில் கலெக்டர் ஆய்வு
தேனி : மாவட்டத்தில் உள்ள மாநில எல்லைகளான குமுளி, கம்பம் மெட்டு, போடி மெட்டு, மாவட்ட எல்லைகளான ஆண்டிபட்டி, காமக்காபட்டி, தாழையூத்து ஆகிய சோதனை சாவடிகள் உள்ளன.
இந்த சோதனை சாவடிகள் வழியாக போதைப்பொருட்கள், அனுமதியின்றி கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவது கண்காணிக்கப்படுகிறது. தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமராக்களை கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி சோதனைசாவடியில் கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார். பணியில் இருந்த போலீசாருக்கு அறிவுறை வழங்கினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement