போலீஸ் செய்திகள்...

-பெண்ணிடம் வழிப்பறி

தேனி: கோடாங்கிபட்டி தெற்குத்தெரு மீனாவினோதினி 32. இவரது டூவீலரில் தங்கையுடன் தேனி நோக்கிச் வந்தனர். டூவீலரை ஓட்டிச் சென்ற மீனாவினோதினி சோர்வாக இருந்ததால், வண்டியை ரோட்டின் ஓரமாக போடி பிரிவிற்கு அருகில் நிறுத்தினர். அப்போது டூவீலரின் சீட்டில் கேன் பேக்கை வைத்தனர். அப்போது அடையாளம் தெரியாத 2 நபர்கள், அதனை எடுத்து தப்பிவிட்டனர். அதில், பணம் ரூ.2 ஆயிரம், ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசி, ஆறு ஏ.டி.எம்., கார்டுகள், வீட்டுச்சாவி இருந்துள்ளது. பெண் புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

மது விற்ற இருவர் கைது

தேனி: பழனிசெட்டிபட்டி எஸ்.ஐ., மணிமாறன் தலைமையிலான போலீசார் வாழையாத்துப்பட்டி பிரிவு அருகே ரோந்து சென்றனர். அப்போது பூதிப்புரம் சுப்பிரமணியர் கோயில் தெரு சங்கர் 46, எட்டு மதுபாட்டில்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் மதுபாட்டில்களை கைப்பற்றினர்.

தேனி: போடேந்திரபுரம் போடி மெயின் ரோடு மாசிலாமணி 38. இவர் தனது வீட்டின் அருகில் உள்ள காலியிடத்தில் ஏழு மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்தார். வீரபாண்டி எஸ்.ஐ., அசோக், அவரை கைது செய்தார்.

மரங்களை வெட்டி கடத்திய 7 பேர் மீது வழக்கு

தேனி: தேவாரம் டி.ரெங்கநாதபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் வசந்தி. இவர் தேவாரம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ஊராட்சிக்கு சொந்தமான மயானம் அருகே உள்ள இடத்தில் 30 ஆண்டுகளாக வளர்ந்த பச்சை மரங்களை, மயானத்தை பயன்படுத்தி வரும் சமூகத்தை சேர்ந்த சுகுமாறன், தென்னரசு, ஆசிரியர் துரைராஜ், ராஜபாண்டி,மூனாண்டிபட்டி ஈஸ்வரன், மீசைராசு ஆகிய 6 பேர், ஊராட்சி அனுமதியின்றி புதுக்கோட்டையை சேர்ந்த முருகனுக்கு ரூ.1 லட்சத்திற்கு கிரையம் பேசி, பல லட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டி லாரி மூலம் கடத்தி சென்றனர். அவர்கள் ஏழு பேர் மீது நடவடிக்கை எடுக்க கோரினார். தேவாரம் எஸ்.ஐ., தெய்வகண்ணன் ஊராட்சி முன்னாள் தலைவர் புகாரில் மரங்களைவெட்டிக் கடத்திய 7 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement