இந்திலி முருகன் கோவிலில் தைப்பூச  விழா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி, பாலசுப்ரமணியர் கோவிலில், தைப்பூசத்தையொட்டி, சிறப்பு அபிேஷகம் நடந்தது.

அதனையொட்டி, நேற்று காலை மூலவருக்கு, பல்வேறு திரவியங்களால் அபிேஷகமும், சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் மகாதீபாரதனையும் நடந்தது.

இதேபோல, கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் சாமியார்மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில், முருகப்பெருமானுக்கு, சிறப்பு அபிேஷக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.

மேலும் கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவில், நீலமங்கலம் சொர்ணபுரீஸ்வரர், ஏமப்பேர் ஏகாம்பரேஸ்வரர், சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர், தென்கீரனுார் அருணாசலேஸ்வரர் கோவில்களிலும் உள்ள முருகன் சன்னதிகளில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Advertisement