வித்யா 'ஹாட்ரிக்' தங்கம் * தேசிய விளையாட்டு தடகளத்தில்...
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853030.jpg?width=1000&height=625)
டேராடூன்: தேசிய விளையாட்டு 400 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா, 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார்.
தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் நடக்கிறது. நேற்று இதில் பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டம் நடந்தது. பாரிஸ் ஒலிம்பிக் 4X400 மீ., தொடர் ஓட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தின் வித்யா 26, பங்கேற்றார். இவர், 58.11 வினாடி நேரத்தில் ஓடிவந்து, தங்கப்பதக்கம் வென்றார்.
தொடர்ந்து மூன்று (2022, 2023, 2025) தேசிய விளையாட்டிலும் அசத்திய இவர், 'ஹாட்ரிக்' தங்கம் வசப்படுத்தினார்.
மற்றொரு தமிழக வீராங்கனை ஸ்ரீவர்தானி (59.86) வெள்ளி, மகாராஷ்டிராவின் நேஹா (1:00.52) வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.
கோபிகா 'வெள்ளி'
பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஹரியானாவின் பூஜா (1.84 மீ.,) தங்கம் வென்றார். தமிழகத்தின் கோபிகா, 1.79 மீ., உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார். கர்நாடகாவின் அபிநயா (1.77 மீ.,) வெண்கலம் வசப்படுத்தினார்.
சச்சின் கலக்கல்
ஆண்களுக்கான ஈட்டி எறிதல் நடந்தது. நீரஜ் சோப்ரா, கிஷோர் ஜெனா பங்கேற்காத நிலையில் உ.பி., வீரர் சச்சின் யாதவ், 84.39 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். உ.பி., வீரர்கள் ரோகித் யாதவ் (86.23 மீ.,), விகாஷ் சர்மா (79.33 மீ.,) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
ஆண்களுக்கான 5000 மீ., ஓட்டத்தில் ஹிமாச்சல பிரதேசத்தின் சவான் பார்வல் (13 நிமிடம், 45.93 வினாடி) தங்கம் வென்றார். தவிர ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவும் தகுதி பெற்றார்.
ஆண்கள் ஹாக்கி அரையிறுதியில் கர்நாடக அணி, 5-4 என 'பெனால்டி ஷூட் அவுட்டில்' மகாராஷ்டிராவை சாய்த்து, பைனலுக்குள் நுழைந்தது. ஆண்களுக்கான 400 மீ., தடை ஓட்டத்தில் குஜராத்தின் ருசித் மோரி (தங்கம்), பஞ்சாப்பின் ஹர்தீப் (வெள்ளி), சர்வீசஸ் அணியின் பரத்வாஜ் (வெண்கலம்) முதல் மூன்று இடம் பிடித்தனர்.
பெண்களுக்கான குண்டு எறிதலில் பஞ்சாப்பின் ஜாஸ்மைன் கவுர் (15.97 மீ.,), உ.பி.,யின் விதி (15.46), டில்லியின் சிருஷ்டி (15.46) தங்கம், வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
மேலும்
-
தன்பாலின ஈர்ப்பாளர், திருநங்கையருக்கு ஒருங்கிணைந்த கொள்கை கூடாது முதல்வருக்கு சவுமியா கடிதம்
-
கள்ளக்காதல் பிரச்னை: தொழிலாளி கொலை
-
பெட்ரோல் குண்டுகளுடன் பைக்கில் சுற்றிய நபர் கைது
-
'இண்டியா' கூட்டணியில் பிளவே ஆம் ஆத்மி தோல்விக்கு காரணம் சொல்கிறார் மார்க்சிஸ்ட் பாலகிருஷ்ணன்
-
ரூ.100ஐ தொடும் தேங்காய்: நல்லசாமி எச்சரிக்கை
-
கொலை முயற்சி வழக்கில் 5 பேர் சரண் தி.மு.க., கவுன்சிலரை விசாரிக்க திட்டம்