மாரடைப்பு ஏற்பட்டு 27 வயது இளைஞர் பலி
கோவை; திருநெல்வேலி, கோபால சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன், 27. இவர், கோவை சுண்டக்காமுத்துார் பகுதி யில், நண்பர் திவாகருடன் தங்கியிருந்து, 'ஈவென்ட் மேனேஜ்மென்ட்' தொழில் செய்து வருகிறார்.
கடந்த 11ம் தேதி அதிகாலை 4:30 மணியளவில், பிரபாகரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அவரது நண்பர் திவாகர், அருகில் உள்ள ஒரு கிளினிக் சென்று, விஷயத்தை கூறி மாத்திரை கேட்டுள்ளார். அவர்கள் மாத்திரை கொடுக்காமல், பிரபாகரனை கிளினிக் அழைத்து வருமாறு தெரிவித்தனர்.
திவாகரன் அறைக்கு சென்று, பிரபாகரனை அழைத்துக் கொண்டு, மருத்துவமனைக்கு சென்றார்.
செல்லும் வழியில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பிரபாகரன் மயங்கி, கீழே சரிந்தார்.
இதை அவ்வழியாக வந்த பீட் போலீசார் பார்த்தனர். இளைஞரை டாக்ஸியில் ஏற்றி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
அரசு புள்ளி விபரங்களை தொகுக்க ஊழியர்களுக்கு ஐ.ஐ.எம்.,மில் பயிற்சி
-
சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில் ராகிங் பிரச்னை பெற்றோர்கள் பதிலால் விசாரணை கமிட்டி அதிர்ச்சி
-
மாணவியரிடம் அத்துமீறிய தொழில்நுட்பனர் 'சஸ்பெண்ட்'
-
ஜி.எஸ்.டி., தாக்கலில் அபராதம் விதிப்பதை நிறுத்த மத்திய செயலரிடம் வலியுறுத்தல்
-
செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தி.மு.க., அரசியல் செய்வதாக அ.தி.மு.க., ஆவேசம்
-
சில வரி செய்திகள்