மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளியை தட்டிய கோவை வீரர்

கோவை; உத்தரகண்டில் நடக்கும் தேசிய விளையாட்டு போட்டியில், கோவை வீரர் வெள்ளி வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலத்தில், 38வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில், தமிழக வீரர், வீராங்கனைகள் பதக்கங்கள் குவித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நடந்த போட்டியில், கோவை வீரர் முகமது சலாவுதீன் வெள்ளி பதக்கம் வென்று, பெருமை சேர்த்துள்ளார்.

ஆண்களுக்கான மும்முறை தாண்டுதல் போட்டியில், 16.01 மீட்டர் துாரம் கடந்து பதக்கம் வென்றுள்ள இவர், கோவையில் உள்ள மத்திய கலால் மற்றும் சுங்க வரி அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். சக வீரர்கள், அலுவலர்கள் முகமது சலாவுதீனை, பாராட்டி வருகின்றனர்.

Advertisement