மேம்பாட்டு பணிகளால் ரயில் இயக்கத்தில் மாற்றம்

கோவை; மேம்பாட்டு பணிகள் காரணமாக, வாராந்திர ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என, ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கட்டாக் ரயில்வே ஸ்டேஷனில், பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன. இதை முன்னிட்டு, கோவை - சில்சர்(12515) செல்லும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், வரும், 16, 23, மார்ச், 2, 9, 16 ஆகிய தேதிகளில், பாராங் சந்திப்பு, காப்பிலாஸ் சந்திப்பு வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில், கட்டாக் செல்லாது.

அதே போல், எர்ணாகுளம் - பாட்னா (22643) வாரத்தில் இரு முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில், வரும், 17, 18, 24, 25, மார்ச், 3, 4, 10, 11, 17 ஆகிய தேதிகளில் பாராங் சந்திப்பு, காப்பிலாஸ் சந்திப்பு வழித்தடத்தில் இயக்கப்படும். இந்த ரயில் கட்டாக் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement