பிப்.18ல் கொடியேற்றம்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பிப். 18ல் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடி யேற்றம் நடக்கிறது.

இதனைத் தொடர்ந்து பிப்.,24ல் முத்தங்கி சேவையில் சுவாமி, அம்மன் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா செல்வர். பிப்., 26ல் மாசி மகா சிவராத்திரியை யொட்டி மாசி தேரோட்டம், அன்றிரவு 9:00 மணிக்கு மேல் வெள்ளி ரதம் புறப்பாடு, பிப்., 27ல் மாசி அமாவாசையையொட்டி சுவாமி, அம்மன் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரிக் கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும்.

தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் இத்திருவிழா மார்ச் 1ல் முடிவடையும். விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் சிவராம்குமார் செய்துவருகிறார்.

Advertisement