மாணவியருக்கு சீண்டல் விடுதி சமையலர் கைது
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு அருகே கே.கைலாசபுரம் உயர்நிலைப்பள்ளியின் வளாகத்தில், மைக்கேல் போடிங் ஹாஸ்டல் என்ற தங்கும் விடுதி உள்ளது. அங்கு, 50க்கும் மேற்பட்ட மாணவியர் தங்கி, படித்து வருகின்றனர்.
விடுதியில், கடம்பூர் கள்ளத்திகிணறு வடக்கு தெருவைச் சேர்ந்த சுரேஷ்குமார், 47, சமையலராக வேலை பார்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன் விடுதியில் தங்கியிருந்த பழங்குடியின மாணவியர் ஆறு பேரிடம் சுரேஷ்குமார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவியர், பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்ததும், சுரேஷ்குமார் தலைமறைவாகி விட்டார். பள்ளி நிர்வாகம் சார்பில் கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது. போக்சோ வழக்கு பதிவு செய்த போலீசார், சுரேஷ்குமாரை நேற்று கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement