தேர்தல் குறித்த தகவல்கள் பாதுகாப்பாக உள்ளது; தவறு நடக்காது ராஜிவ்குமார் உறுதி
![](https://images.dinamalar.com/data/large_2024/Tamil_News_lrg_3853749.jpg?width=1000&height=625)
புதுடில்லி: ஓட்டு சதவீதம் குறித்த தகவல்கள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது. அதில் தவறு நடக்காது என தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவாகும் ஓட்டு சதவீதம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. வாக்காளர் பட்டியலிலும் திடீரென அதிக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.
சமீபத்தில், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கப்படும் என தேர்தல் கமிஷனர் கூறியிருந்தது.
இந்நிலையில் லோக்சபா தேர்தல் தொடர்பாக ஆவணம் வெளியிடும் நிகழ்ச்சியில் தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ்குமார் பேசியதாவது: ஓட்டுச்சாவடியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் என லட்சக்கணக்கானோர் தகவல்களை பதிவேற்றம் செய்கின்றனர். இதில் தவறு நடக்காது. தவறாக எதும் நடக்காது என தேர்தல் கமிஷன் உறுதியாக நம்புகிறது. யாராவது தவறு செய்ய முயற்சித்தாலும், அது நிராகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு ராஜிவ் குமார் பேசினார்.
![தாமரை மலர்கிறது தாமரை மலர்கிறது](http://stat.dinamalar.com/new/2012/images/no_image.jpg)
![ஆனந்த் ஆனந்த்](https://img.dinamalar.com/data/uphoto/image_465306_20241023203135.jpg)