ரூ 5 கோடி மதிப்பு சிவன் கோவில் நிலம் மீட்பு; அறநிலையத்துறை நடவடிக்கை

4

திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.5 கோடி மதிப்பிலான சிவன் கோவில் நிலம் மீட்கப்பட்டது.


திருநெல்வேலி அருகே கிருஷ்ணாபுரத்தில், தகிருஷ்ணேஸ்வரமுடையார், அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது. 18ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த கோவிலுக்கு சொந்தமான 37 சென்ட் நிலம், திருச்செந்தூர் முக்கிய சாலையையொட்டி உள்ளது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ. 5 கோடியாகும்.


தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அந்த நிலத்தை நேற்று ஹிந்து அறநிலைத்துறை உதவி ஆணையாளர் சுப்புலட்சுமி, தாசில்தார் வள்ளிநாயகம் , ஆய்வாளர் பர்வீன் பாபி ஆகியோர் தலைமையில் ஹிந்து அறநிலையத்துறை ஊழியர்கள் இயந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டனர். சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டது. சிவந்திபட்டி போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

Tamil News

Advertisement