சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:காலி பணியிடங்களை நிரப்பக்கோரி, தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் சார்பில், தர்மபுரி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை வகித்தார்.
செயலாளர் சுதாகர், பொருளாளர் லோகநாதன் மாநில அமைப்பு செயலாளர் கரிகாலன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், 100 சதவீதம் முற்றிலும் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை- 2 பணியிடங்களை உடனடியாக போர்க்கால அடிப்படையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு முன்னுரிமை அளித்து நிரப்ப வேண்டும்.
சுகாதார ஆய்வாளர் நிலை- 2 பணியிடங்களை, 2,715 ஆக நிர்ணயிக்ககோரி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் அரசுக்கு அனுப்பிய கோப்புக்கு, உடனடி ஒப்புதல் வழங்க வேண்டும். 5,000 மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் நிலை- 2 என்ற கொள்கை முடிவை அமல்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
மேலும்
-
டிரையம்ப் நிறுவனத்தின் புதிய பைக் ஷோரூம் திறப்பு
-
புற்றுநோய் சிறப்பு மருத்துவர் நாளை புதுச்சேரிக்கு வருகை
-
சாப்ட்வேர் இன்ஜினியரிடம் ரூ.1.64 கோடி மோசடி
-
த.வெ.க., நிர்வாகி 'போக்சோ'வில் கைது
-
மீன் குழம்பில் விஷம் கலந்து கணவர் கொலை கள்ளக்காதலனுடன் மனைவி கைது
-
சனீஸ்வரர் பெயரில் பண மோசடி கோவில் குருக்கள், பெண் மீது வழக்கு