ஆற்றங்கரையோர சாலைக்கு தடுப்புச்சுவர் அமைப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்ட்ரேட் பின்புறம் உள்ள எம்.ஜி.ஆர்., நகர் பிரதான சாலையோரம் வேகவதி ஆறு செல்கிறது. சாலையின் தரைமட்டத்தில் இருந்து இரண்டு அடி ஆழத்திற்கும் மேல் உள்ள வேகவதி ஆற்றங்கரைக்கு தடுப்புச்சுவர் அமைக்கப்படாமல் இருந்தது.

இதனால், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், போதுமான மின்விளக்கு இல்லாத பகுதியில் கனரக வாகனத்திற்கு வழிட ஒதுங்கும்போது, தடுப்புச்சுவர் இல்லாத வேகவதி ஆற்றில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, எம்.ஜி.ஆர்., நகர் பிரதான சாலையை ஒட்டியுள்ள வேகவதி ஆற்றுக்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.

இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், எம்.ஜி.ஆர்., நகர் சாலையை ஒட்டியுள்ள வேகவதி ஆற்றங்கரைக்கு தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement