பேருந்து நிறுத்தம் அருகில் ஆக்கிரமிப்பு கடை அகற்றம்
திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையம், ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி பகுதியில் இருந்து திருப்பதி, திருத்தணி, பெரியபாளையம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் ஜே.என்.சாலை வழியாக பயணம் செய்கின்றன. இதில், ஆயில் மில் பகுதி, அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகம், காமராஜர் சிலை மற்றும் சி.வி.நாயுடு சாலையில் கடைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால், அந்தச் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவி வந்தது.
இதையடுத்து நெடுஞ்சாலை துறையினர் இந்த ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் கடந்த சில வாரத்திற்கு முன் அகற்றினர்.
ஒரு வாரம் கடந்த நிலையில், தாலுகா அலுவலக பேருந்து நிறுத்தம் அருகில், புதிதாக காபி கடை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்தது. இதனால், பயணியர் நிற்க இடமின்றி தவிப்பதுடன், தாலுகா அலுவலகத்திற்குள் வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன.
இதுகுறித்து 'நம் நாளிதழில்' செய்தி வெளியானது. இதையடுத்து, நெடுஞ்சாலை துறை உத்தரவின்படி, காபி கடையும் அகற்றப்பட்டது.
மேலும்
-
கும்பல் மோதல்: வாலிபர் கொலை
-
சாம்ராஜ் நகரில் அமைச்சரவை கூட்டம் மூன்றாவது முறையாக தள்ளிவைப்பு
-
வாடகைக்கு இயங்கிய 12 கார்கள் ஆர்.டி.ஓ., அதிகாரிகள் பறிமுதல்
-
கள்ளக்காதலியுடன் ஓடிய கணவர் நடுரோட்டில் 2 பெண்கள் அடிதடி
-
ஜெயித்த காளைகளுக்கு 'புல்லட்' குதிரைகளுக்கு 'ஹோண்டா பைக்'
-
கும்பமேளாவில் புனித நீராடிய ரமேஷ் ஜார்கிஹோளி