வங்கி ஊழியர் சங்கம் போராட்டம் நடத்த முடிவு
கோவை; வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், பழைய பென்ஷன் திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவையில் இன்று மாலை, முன்னோடி வங்கி (கனரா வங்கி) முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
வரும் 21ம் தேதி காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் உள்ள, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மண்டல அலுவலகம் முன், மார்ச் 3ம் தேதி டாடாபாத் யூனியன் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.மார்ச் 24ம் தேதி காலை, ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள பாங்க் ஆப் பரோடா முன் ஆர்ப்பாட்டம், 25ம் தேதி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முன் ஆர்ப்பாட்டத்துடன், இரு நாட்களும் வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement