மண்ணரை ரோடு... சீரமைப்பது யாரு?

திருப்பூர்; திருப்பூர், மண்ணரை பகுதியை மணியகாரம்பாளையத்துடன் இணைக்கும் வகையிலான ரோடு உரிய பராமரிப்பின்றி உள்ளது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி, ஊத்துக்குளி ரோட்டில் அள்ள மண்ணரை பகுதியை மணியகாரம்பாளையம் பகுதியுடன் இணைக்கும் வகையிலான மாநகராட்சி ரோடு உள்ளது. நொய்யல் ஆற்றின் கரையை ஒட்டி வந்து, மூளிக்குளம் செல்லும் வாய்க்கால் ஆகியவற்றையும் கடந்து இந்த ரோடு செல்கிறது.
பல்வேறு குடியிருப்பு பகுதிகள், சிறிய தொழில் நிறுவனங்கள் ஆகியன இப்பகுதியில் அமைந்துள்ளன. ஊத்துக்குளி ரோட்டையும், காங்கயம் ரோட்டையும் இணைக்கும் வகையிலான ஒரு குறுக்கு வழி பாதையாகவும் இந்த ரோடு உள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான பைக், கார் போன்ற வாகனங்களும், இலகு ரக சரக்கு வாகனங்களும் அதிகளவில் இந்த ரோட்டைப் பயன்படுத்துகின்றன.
கடந்தாண்டு இந்த ரோடு பாதாள சாக்கடை திட்டத்தில் குழாய் பதிப்பு பணிக்காக குழி தோண்டும் பணி நடந்தது. நீண்ட நாள் இப்பணி காரணமாக இந்த ரோட்டில் பெரும் அவதி நிலவியது.
ஒரு வழியாக குழாய் இணைப்பு முடிந்தது. அதன் பின் குழியை மண் கொட்டி மூடிச் சென்றனர். ரோடு முழுமையாக சீரமைக்கப்படாமல், குண்டும் குழியுமாக காணப்படுகிறது. வாகனங்கள் கடந்து செல்வதில் பெரும் சிரமம் நிலவுகிறது.
சிறு விபத்துகள் ஏற்படுவதும், வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயமடைவதும் அடிக்கடி நடக்கிறது. எனவே, இந்த ரோட்டை முழுமையாக தார் ரோடாக மாற்ற வேண்டும்.
மேலும்
-
30 பவுன் திருட்டு ஒருவர் கைது
-
துண்டு பிரசுரம் வழங்கிய 30 பேர் மீது வழக்கு
-
விரைவில் புறவழிச்சாலை அமைக்கப்படும் 'தினமலர்' செய்தியை சுட்டிக்காட்டி எம்.எல்.ஏ., உறுதி
-
நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
-
கள்ளக்குறிச்சியில் விலங்குகள் சரணாலயம்... அமைக்கப்படுமா; விபத்தில் சிக்குவதை தடுக்க நடவடிக்கை தேவை
-
கார் மோதி ஒருவர் படுகாயம்